Thursday, September 15, 2022

Sree Kalyani Ambika Samedha Sree Kailasanathar and Sree Meenakashi Sundareswarar Kovil Kumbhabhishekam, Sattanathapuram - Sirkazhi

At the outset, I start with pranams to Jagadguru Sankaracharya His Holiness Sri Sri Sri Bharathi Theertha Mahaswamigal, the ruling and 36th Pontiff and His successor designate Jagadguru Sankaracharya His Holiness Sri Sri Sri Vidhu Shekhara Bharathi Swamigal the 37th Pontiff of Sri Sringeri Saradha Peetham for everyone’s welfare & continued prosperity.

As I have been collating a lot of notes both in Tamil and English, for this temple Kumbhabhishekam write-up, I have maintained the same flow and thought process instead of providing translations.

Sree Kailasanathar


ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத
ஸ்ரீ கைலாசநாதர் மற்றும்
ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில்

பாரதமாதாவின் முக மண்டலம் என திகழும் புண்ணிய பூமியாகிய தெய்வத்தமிழ் திருநாட்டில் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தர் பெருமான் திருஅவதாரம் செய்த ஸ்தலத்திற்கு தென்பால் அமைந்துள்ள சட்டநாதபுரம் கிராமத்தில் 192 ஆண்டு முன்பாக (1830ம் ஆண்டு) சிறந்த சிவபக்தர் மற்றும் எங்கள் வம்சாவழி மூதாதையர் ஸ்ரீ சிவசுப்பராய ஐயர் அவர்களால் திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக நடந்துகொண்டு வருகிறது.


தற்சமயம், சிவ பக்தர்களின் பெரும்தொண்டினாலும், எல்லா நல்லுங்களின் பெரும் முயற்சியாலும், ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சிறந்த முறையில் திருப்பணி செய்யப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டி நிகழும் மங்களகரமான சுபகிருது வருஷம் சித்திரை மாதம் 30ம் தேதி (13-05-2022) வெள்ளிக்கிழமை வளர்பிறை துவாதசி ஹஸ்த நக்ஷத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள், மற்றும் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ பாரதிதீர்த்த மஹாசன்னிதானம், மற்றும் ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதி சன்னிதானம் அவர்களின் பரமாணுக்கிரஹத்துடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இப்படிக்கு,

பரம்பரை தர்மகர்த்தா நிர்வாக பொறுப்பு வகிக்கும்
சுந்தரேசன் ஜெகதீசன்

சட்டநாதபுரம்
13-05-2022