At the outset, I start with pranams to Jagadguru Sankaracharya His Holiness Sri Sri Sri Bharathi Theertha Mahaswamigal, the ruling and 36th Pontiff and His successor designate Jagadguru Sankaracharya His Holiness Sri Sri Sri Vidhu Shekhara Bharathi Swamigal the 37th Pontiff of Sri Sringeri Saradha Peetham for everyone’s welfare & continued prosperity.
As I have been collating a lot of notes both in Tamil and English, for this temple Kumbhabhishekam write-up, I have maintained the same flow and thought process instead of providing translations.
|
Sree Kailasanathar |
ஸ்ரீ கல்யாணி அம்பிகா
சமேத
ஸ்ரீ கைலாசநாதர் மற்றும்
ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில்
பாரதமாதாவின் முக மண்டலம் என திகழும் புண்ணிய பூமியாகிய தெய்வத்தமிழ் திருநாட்டில் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தர் பெருமான் திருஅவதாரம் செய்த ஸ்தலத்திற்கு தென்பால் அமைந்துள்ள சட்டநாதபுரம் கிராமத்தில் 192 ஆண்டு முன்பாக (1830ம் ஆண்டு) சிறந்த சிவபக்தர் மற்றும் எங்கள் வம்சாவழி மூதாதையர் ஸ்ரீ சிவசுப்பராய ஐயர் அவர்களால் திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக நடந்துகொண்டு வருகிறது.
தற்சமயம், சிவ பக்தர்களின் பெரும்தொண்டினாலும், எல்லா நல்லுங்களின் பெரும் முயற்சியாலும், ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சிறந்த முறையில் திருப்பணி செய்யப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டி நிகழும் மங்களகரமான சுபகிருது வருஷம் சித்திரை மாதம் 30ம் தேதி (13-05-2022) வெள்ளிக்கிழமை வளர்பிறை துவாதசி ஹஸ்த நக்ஷத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள், மற்றும் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ பாரதிதீர்த்த மஹாசன்னிதானம், மற்றும் ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதி சன்னிதானம் அவர்களின் பரமாணுக்கிரஹத்துடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இப்படிக்கு,
பரம்பரை தர்மகர்த்தா நிர்வாக பொறுப்பு வகிக்கும்
சுந்தரேசன் ஜெகதீசன்
சட்டநாதபுரம்
13-05-2022
திருக்கோவில் வரலாறு
நமது புண்ணிய பாரத தேசத்தில் தென் தமிழகத்தின் காவிரி வடகரையில் திருஞானசம்பந்தர் அவதரித்த மாநகரின் தென் பகுதியிலும், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தற்கால நிர்வாக பொறுப்பு வகிக்கும் திரு. சுந்தரேசன் அவர்களின் வம்ச முன்னோர்கள் வம்சாவழியை சார்ந்த ஸ்ரீ சிவா சுப்பராய ஐயர் அவர்களால் சட்டநாதபுரம் அக்ராஹாரத்தின் கிழக்குப் பகுதியில் ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் நிர்மாணம் செய்யப்பட்டு, மேலும் இவர்கள் குடும்பத்தினர்கள், தர்ம சிந்தனையாளர்கள், மற்றும் கிராமவாசிகள் தங்களுக்குள்ள வருமானத்திலிருந்து கோயிலை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.
கடந்த நூற்றாண்டு வரலாறு
1930 ஆம் ஆண்டு ஜெ. வெங்கட்ரமணி ஐயர் அவர்களால் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கோவில் குளம் அமைக்கும் பொழுது ஓர் பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. சட்டநாதபுரம் கிராமத்தில் இருந்த மாடிவீடு சுப்ரமணிய ஐயர் அவர்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1961 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சீர்காழி அரசு வழக்கறிஞர் திரு. கே. சீதாராமய்யர், மற்றும் முன்னாள் பரம்பரை அறங்காவலர் திரு. எஸ். எஸ். ஸ்ரீனிவாச ஐயர் அவர்களின் பெரும் முயற்சியாலும், கோபால ஒளஷத ஆலய நிறுவனர் நாராயணசாமி ஐயர் அவர்களால், ஸ்ரீ சந்திரசேகரர் ஸ்ரீ கல்யாணி அம்பாள், ஸ்ரீ விநாயகர் வெண்கல உற்சவ சிலைகளை செய்வித்து விழாக்காலங்களில் சிறப்பாக உற்சவ பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
2001 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் திரு. எஸ். எஸ். சீனிவாசன் ஐயர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தின் உட்புறம் மகாமண்டபம் சிறப்பாக அமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு ஸ்ரீ சரபேஸ்வரர் தனி சன்னிதி அமைக்கப்பட்டு, திருப்பணி வேலைகள் சிறப்பாக நடைபெற்றது. மற்றும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ பிரத்தியங்கராதேவி சிலைகள் சுவாமி சன்னதியில், ஸ்ரீ சரபேஸ்வரர் எதிர்புறம் அமைக்கப்பட்டு 2006 இல் நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம், ஸ்ரீ பிரத்தியங்கராதேவி சந்நிதிக்கு நடைபெற்றது.
2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெற்று கிழக்குப் பக்கம் உள்ள மண் சுவர் பழுதடைந்துள்ளதை அப்புறப்படுத்தி, புதிய திருமதில் சுவர் கட்டப்பட்டது. மேற்குப்புறம் கோபுர நுழைவாயில் பக்கமும் பழுதடைந்த சுவர் அப்புறப்படுத்தி புதிய திருமதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இட்சாயினி என்கிற பிடாரியம்மன் சந்நிதி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததை புதிய புனண்ந்ததாரணம் செய்து புதிய விமான கட்டிடம் அமைக்கப்பட்டு, எல்லை காவல் தெய்வம் ஸ்ரீ பிடாரியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மற்றும் அனைத்து விமானங்களுக்கும் வர்ணம் தீட்டி சூரியன் சந்திரன் சந்நிதிக்கு புதிதாக மண்டபம் அமைக்கப்பட்டு, மற்றும் சிறிய மடபள்ளியறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
பல நல்ல உள்ளங்களின் பெரு முயற்சியாலும், மற்றும் சிவ பக்தர்களின் பொருள் உதவியாலும் கோவில் சீரமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று உள்ளது. ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் அருள் அனைவரும் பெற இறைவனை வேண்டி விரும்பி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
- சிவ சிவ -
திருச்சிற்றம்பலம்
Sree Kalyani Ambika Samedha Sree Kailasanathar and Sree Meenakshi Sundareswarar Kovil Kumbhabhisekam, Sattanathapuram - Sirkazhi were completed on 13-05-2022 [Friday].
While our family members were making efforts for performing the Kumbhabhishekam for the Sivan temple from 2019 onwards the same was not moving towards fruition due to the covid-19 pandemic which lasted for 2 years. We started the work in November 2021 and completed the work in May'2022 and the Mandalabhishekam completion on 27th Jun'22.
Recapturing and reliving those divine moments through the lenses of many well-wishers, without whose kind support and divine intervention at each stage of such a divine work wouldn't have passed off as a breeze.
With humility, it is just apt to say "Sree Kailasanathar took care of his Home, abode, and the needed activities On His own timing and used the needed instruments as appropriate".
Preparation [ Nov'21 to April'22]
Nov'21: Smt. Girija Krishnaswamy lighting the lamp for Thirupani work
|
Nov'21: Family and Village members initiate Thirupani work with prayers |
|
Dec'2021 Pandakal Muhurtham |
|
Dec'21: Thirupani Intimation letter |
|
Balalaya Astrabhishekam Sankalpam |
The earlier mud compound wall of the temple on the front and back [ eastern and western side] which was more than 80 years old was replaced with new RCC/Cement constructions, around 20 Stucco structures inside the temple and on the Vimanam were either newly done or were fully repaired. The Pidari Amman Sannathi which was in a small shed behind the temple was redone as a full-fledged sanctum. New waterway channels were laid to collect and route rainwater from the temple premises into the pond. Small mandapams were erected for Lord Soorya and Lord Chandra on the eastern side and Vigrahams Samprokshnam were properly done as per agama shastras. Madapalli room was redone from the tin roof sheet to RCC.
|
Old Mud wall replaced with new concrete wall |
|
Pidari Amman Sannithi old and New |
|
Work progress-1 |
|
Work Progress-2 |
|
Work progress-3: Sree Dakshinamurthy & Pidari Amman Sannithi |
|
Work Progress-4: Dwarapalakas and Dwarasakthi
|
Kumbhabhishekam Events [08-May-2022 to 13th May 2022]
Family members met the Acharyals of Sringeri Sharada Peetam and Kanchi Kamakoti peetham and took their ashirwads and blessings for the smooth conduct of the Kumbhabhishekam.
As the temple is under the administrative control of HR&CE, all procedural aspects were followed and proper approval and permissions were obtained for events.
|
Kumbhabhishekam invite with detailed events |
|
Approval letter from HR&CE for Kumbhabhishekam |
The various events preceding the Kumbhabhishekam and Kumbhabhishekam events are captured here!
|
Ashtabhandana Marundu |
|
Yagasalai and Lighting |
|
3rd Kalam Poojas |
|
Yagasalai Kundam and Vedikai |
|
Yathra Dhanam and Aarathi |
|
Thiruvilakku Poojai, Lalitha Sahasranamam, and Gopujai |
|
Parivattam and preparation for Samprokshanam |
|
Kalasams moving to respective vimanas with Vedic chanting |
|
Honoring the Sivacharyars and the next generation for their active contribution to Kumbhabhisekam |
|
Honoring Nadhaswara Vidhvaans |
|
Sree Kailasanathar Vimanam |
All the workers and devotees, who participated in the Thirupani and Kumbhabhisekam activities were duly recognized and honored.
Press Coverage
Dinamalar: https://temple.dinamalar.com/news_detail.php?id=124136
Malai Murasu : https://youtu.be/_DsWFWbAPGA
Nagaipattinam news: https://link.public.app/YebiL
|
Souvenir Release |
|
With Respectful prayers to Shri S S Srinivasan Iyer |
Mandalabhishekam poojas were started on 14-05-2022 and were successfully completed on 27-Jun-2022.
மண்டலா அபிஷேக பூர்த்தி
ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சட்டநாதபுரம். மண்டலாபிஷேக பூர்த்தி பூஜைகள்:
27-6-22: திங்கள் காலை 6.30 மணி அளவில், வசோதரா ஹோமம் கலச அபிஷேகம், , அர்ச்சனை, தீபாராதனை
10.00 மணி அளவில் மகா பிரசாதம். ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
Divine Moments
Capturing a few divine moments and incidents that happened during the Kumbhabhisekam.
07-01-2022: நிகழ்வு - 1
A backstory for this divine moment, as follows
There lived a famous astrologer in a kingdom, and he could exactly predict the fortunes of the people based on the horoscope and charged hefty amounts. His predictions are very accurate and seldom met with failure. People were longing to get an appointment for ages to have a glimpse on their own fortunes!!
One day, one of the villagers, finally got an appointment to meet the astrologer, the villager visited him and the astrologer looks into the horoscope for long hours, which is not typical of him, and sends him back home with a message that he may return with the fees tomorrow. Puzzled the astrologer's wife asks, you never let anyone go without paying your fees, but why did you do so to this villager? for which, the astrologer responds, "this man's life expectancy is getting over midnight today and it is not ethical to me to charge him"
On the way, there was heavy rain with wind, and the village stepped aside into a Shiva temple. He couldn't control his shivering due to the wind and the rain and watched the same happening to the Lord Shiva idol. He thinks that he must at least build a roof for Lord Shiva to protect him from Sun, Rain and Cold conditions. With these thoughts, the villager reached his home , once the rain stopped and peacefully slept.
He returns back to the astrologer the next day with the fees to be paid, as requested. The astrologer was in shock to see him. Intrigued astrologer, asks what he did yesterday after he left his home and the villager narrates the sequence that happened and his thoughts at the Lord Shiva temple. Awe stuck the astrologer, concluded that the fortune can be changed completely by the Almightly! If a thought of a shelter for Lord Shiva, could extend a villager's fortune, the fortune of those, who builds and maintains Lord Shiva's temple, will be graced forever by the almighty.
This is also reverred in one of the old songs
புல்லினால் ஐந்து கோடி
புது மண்ணால் பத்து கோடி
செல்லுமாஞாலம் தன்னில்
செங்கல்லால் நூறு கோடி
அல்லியங்கோதை கேளாய்
அரனுறை ஆலயத்தை
கல்லினால் செய்த பேர்கள்
கயிலை விட்டு அகலாராமே!!
In Summary those who have been part of temple construction to Lord Shiva will never leave the abode of Lord Shiva in Kailash.
An event exactly in line with the above story happened
An ardent devotee has made a vow that his unwell mother will participate in the temple Thirupani, and be part of its logical completion. While visiting Thirunallaru, made a chance visit to Lord Kailsanathar temple premises on 7th Jan, and looking into the thirupani work, wanted to be part of this divine order and took some of the Thirupani work. With God's grace, the devotee's mother was able to actively participate in all the functions of temple and their own family without any hiccups. They are keeping up with good health and continuing to contribute to this divine work.
It said that if you have taken a vow to Lord Shiva to be part of temple construction, HE completely takes responsibility to enable the fulfillment of the promised Karma and protect the Dharma of his devotee" Dharmo rakshathi rakshithaha (Those who protect Dharma, will be protected by Dharma itself)".
10-01-2022: நிகழ்வு - 2
இன்று ஒரு ஆச்சரியமான நிகழ்வு.
நேற்று கனி ராமசுவாமி சங்கரன் என்பவரிடம் கும்பாபிஷேகம் விஷயமாக பேசிக் கொண்டிருந்தேன். இவர்கள் 1940 வருடத்தில் சட்டநாத புறத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர். ஆனால் இன்றும் அவர்கள் கிராமத்துடனும் நமது குடும்பத்துடனும், தங்களுடைய தொடர்பை வைத்துக் கொண்டு உள்ளார்கள்.
மதில் சுவர் மற்றும் பிடாரி அம்மன் ஆலயம் சரி செய்வதற்கு 125 மூட்டை சிமெண்ட் தேவைப்படும் என்று கூறினேன். அப்பொழுது அவர், கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களுக்கு ஒரு லெட்டர் ஏற்பாடு செய்யும்படியும், அதற்கு உண்டான பொருட்களுக்கு நிதி உதவி செய்யுமாறும் ஒரு கடிதம் நமது லெட்டர் பேடில் எழுத சொன்னார். ( அவரிடம் பேசிவிட்டு சிவாவிடம் நான் லெட்டர் பேடில் எழுத நேற்று கேட்டுக்கொண்டேன் )
கனி இராமசாமி அவர்கள் இன்று தனக்குத் தெரிந்த சிமெண்ட் டீலர் நண்பரிடம் இதைப் பற்றி தானே பேசியுள்ளார். அவர் எனக்குத் தெரிந்த ஒரு பையன் கும்பாபிஷேகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறான, நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்.கணி ராமசாமியின் நண்பர், தான் சிமெண்ட் டீலர்ஷிப் பை விட்டு விட்டதாகவும், ஆனால் கண்டிப்பாக ஏதாவது செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
கனி ராமசாமி நண்பர் அவரே சீர்காழியில் உள்ள ஒரு சிமெண்ட் டீலரை விசாரித்து, 125*Rs 400 என்று கணக்கு செய்து, Rs 50,000/- மாலையில் எஸ் ஜெகதீசன் A/C transfer செய்துவிட்டார்.
நம்முடன் முன்பின் அறிமுகமில்லாத நல்லுள்ளம் தானே விசாரித்து, வேண்டியதை ஏற்பாடு செய்வது, பகவான் என்றும் தன் சுய காரியத்தை தானே நிகழ்த்திக் கொண்டு விடுவார் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.🙏🙏🙏
10-05-2022: நிகழ்வு - 3
Due to the Asani cyclone, heavy winds and rains lashed out on the intervening night of 9th May/10th May. The east and north side of the yagasalai was ripped off and some tin sheets were thrown off 50 meters away. The internal decorations gave way and one portion of the yagasalai was severely battered. Braving the rains and wind, the team immediately rushed to the yagasalai from our homes and tried to limit the damage on war footing by removing some of the enclosures for the heavy winds to pass through the 60ft*40ft enclosure. With additional manpower and support, the complete yagasalai was repaired and brought back to its original glory within 11 AM on 10th May. All of us prayed to almighty Sree Kailasanadhar not to test us at the 'n'th moment for we are no match for His divine plays. Lord accepted our prayers and we didn't have further impact even though the weather forecast predicted one more spell of heavy rains and squall.
One more magical play by Lord Sree Kailasanathar testing our resolve and faith, and the answer we offered was nothing but 'pure surrender' 🙏🙏🙏
13-05-2022: நிகழ்வு - 4
After the Kumbhabhisekam event, we were distributing the Prasadhams and randomly the brass pots on which the holy water was stored in yagasala , which were used for Samprokshanam of the Vimanas. We handed over one of the pots to an ardent Lord Muruga devotees family (uncle was unwell and couldn't participate in the Kumbhashikam event, and the brass pot was collected by his son in our Sattanathapuram), who have been performing poojas to Lord Muruga for the past 4 generations and are deeply involved in spiritual and Vedic activities. I received a call in the evening with an excited tone informing, "Lord Muruga has blessed both of us and my Lord Muruga has come home". Puzzled with the excited voice, I enquired for details and uncle sent me the enclosed picture and had the following sequence to narrate.
|
Brass pot (theerthakudam) used for Samprokshanam of Lord Subhramanya Sannidhi |
The brass pot which you handed over to my son was used to carry the holy water to Valli-Dheivanai-Samedha-Sree-Subramanyar-Sannidhi within the temple premises. I checked with my son if Sunderasan had picked up this particular brass pot and handed it over to you, to which my son responded "No" and Sundar was extremely busy running around and randomly picked up the pot and was handed over to me by his father. This random act of kindness of Lord Muruga coming to our home is a divine calling and a reflection that the good deeds done by (y)our family is blessed by the almighty!
I felt humbled, as Lord Sree Kailasanadhar has blessed all of us for the Thirupani work which we have performed, and accepted our temple service wholeheartedly! 🙏🙏🙏
ஸ்ரீ சிவமயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சட்டநாதபுரம்
ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் சிறப்பான முறையில் திருப்பணி செய்யப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டி யாகசாலை அமைத்து வேதபாராயண திருமுறையுடன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாகவும் திருப்பணி திட்டங்களை செவ்வனே செயல் படுத்தவும் தகுந்த ஆலோசனைகளை வழங்கியும், எல்லா திருப்பணி செயல்களும் திருப்திகரமாக அமைவதற்கு பெரும் பொருளுதவி செய்து, இத்தகைய ஒரு பெரும் சிவத்தொண்டினை செய்து முடிக்க பங்குபெற்ற எல்லா நல்லுங்களுக்கும், சுவாமி ஸ்ரீ கயிலகிரிநாதனும், அன்னை ஸ்ரீ கல்யாணி அம்பாளும், மற்றும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மனம் குளிர்ந்து அருளாசி வழங்கி எல்லோரையும் இன்புற்று சிறப்பாக வாழ்வதற்கு அருள் பொழிய பிரார்த்தனை செய்துகொள்கிறோம்.
வானமுகில் வழாது பெய்க!
மலிவளம் சுரக்க!
மன்னன் கோன்முறை அரசு செய்க!
குறைவிலாது உயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்கள் ஒங்க!
நல்தவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக! உலகம் எல்லாம்!
இத்தகைய சிவத்தொண்டை இவ்வடிவதில் பிரசுரிக்க அருளியமைக்கு இறைவனுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள் 🙏
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
- சிவ சிவ -
🙏🙏🙏
2 comments:
Amazing compilation of events & scenarios. True that nothing moves without his will & wish!!
Wonderful compilations of events and beautiful pictures.
Post a Comment